பொங்கல் பண்டிகை முன்னிட்டு இளவட்டக்கல் போட்டி: நெல்லையில் ஆண்களுக்கு நிகராக அசத்திய பெண்கள்!!

நெல்லை: நெல்லை அருகே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் துாக்கி போட்டியில் பரிசு பெற்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர் சிறுமிகள் பங்கேற்கும் போட்டிகள் என கொண்டாட்டங்கள் களைகட்டும். இளைஞர்களுக்கான வீர விளையாட்டுகளும் நடத்தப்படும். அவற்றுள் மஞ்சு விரட்டு, எருது விடுதல், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்டவையும் அடங்கும். இதேபோன்று, வீர விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் தென்னக கிராமங்களில் நடத்தப்படும்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது இளவட்டக்கல் துாக்கும் போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 55 கிலோ இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி முதல் இடத்தை பிடித்தார். 2வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வென்றார். ஆண்களுக்கான 98 கிலோ இளவட்டக்கல் போட்டியில், முதல் பரிசை விக்னேஷ்வரனும்,2வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கியும், சால்வை வழங்கியும் கவுரவிக்கப்பட்டது.

The post பொங்கல் பண்டிகை முன்னிட்டு இளவட்டக்கல் போட்டி: நெல்லையில் ஆண்களுக்கு நிகராக அசத்திய பெண்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: