இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்படும். அதிகபட்ச கடனுதவி ஒரு கோடி ரூபாய். மானியம் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியம். கடனுக்காக செலுத்தும் வட்டியில் 3 விழுக்காடு வட்டி மானியம்.
முன்னாள் படைவீரர்கள், போர் விதவையர்கள், முன்னாள் படைவீரரின் மனைவி, முன்னாள் படைவீரரின் விதவை, திருமணமாகாத மகள், விதவை மகள், 25 வயதிற்கும் குறைவான முன்னாள் படைவீரரின் மகன், முன்னாள் படைவீரர் மனைவி, விதவை, போர் விதவை ஆகியோர் தகுதியுடையவர்கள்.
வயது உச்சவரம்பு திருமணமாகாத மகள், விதவை மகள் – 55 வயது, முன்னாள் படைவீரரின் மகன் – 25 வயது, பயனாளிகளால் எந்த தொழில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அந்த தொழில் சம்பந்தமான நுணுக்கங்கள், மாவட்ட தொழில் மையம் வாயிலாக இலவச அறிவுரைகள் வழங்கப்படும். தொழில் துவங்குவதற்கு முன் தொழில்நுட்ப சம்பந்தமாக இலவச பயிற்சியும் ஏற்பாடும் செய்யப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 044 22262023-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.