வனத்துறை சார்பில் அரசு பள்ளியில் 1200 மரக்கன்று நடும் விழா

மதுராந்தகம்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் தொழுப்பேடு அரசு பள்ளியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு உயிர் தன்மை பாதுகாப்பு பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கான திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு வனவியல் விரிவாக்கம் விளம்பர மையம் சார்பில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து இந்த ஆண்டு இலவசமாக நடவு செய்தும், பள்ளிகளுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கு 1200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் பொன்மலர் சிவக்குமார், செங்கல்பட்டு மாவட்ட வனச்சரக அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை வரவேற்றார்.

இதில் ஒன்றியக் குழு தலைவர் கண்ணன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்று நட்டார். இதை தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்ற நட்டனர். நிகழ்ச்சியில், திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஜி. சிவக்குமார், வனவர் ஜான் கென்னடி, ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், விவசாய அணி அமைப்பாளர் சுந்தரம், சமூக ஆர்வலர் சத்தியகுமார் மற்றும் காயத்ரி தங்கராஜ் உள்பட மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வனத்துறை சார்பில் அரசு பள்ளியில் 1200 மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: