இந்தநிலையில் இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி சாலை விரிவாக்கத்திற்காக சுமார் ரூ.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, இதற்கான பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விரிவாக்கம் செய்யக்கூடிய சாலையின் இருபுறமும் வேப்பமரம், பனைமரம், தென்னை மரம், புளியமரம் போன்ற பழமை வாய்ந்த மரங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த மரங்கள் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள இந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசு உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டனர்.
இதனையடுத்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்டட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.39 கோடியில் சாலை விரிவாக்கம் மரங்கள் அகற்றும் பணி தீவிரம்: டிசம்பருக்குள் முடிக்க இலக்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.