இதேபோல், மதுராந்தகம் நகரை சேர்ந்தவர் குமார் (23), விவசாயி. மதுராந்தகத்தில் இருந்து மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுராந்தகம் சூனாம்பேடு நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் நள்ளிரவு பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனை தொடர்ந்து, சுமார் 12 மணி அளவில் மேம்பாலத்தில் வசந்த் மற்றும் குமார் வந்த இரு பைக்குகளும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், இரு உடலையும் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்த வசந்த் என்பவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தற்போது நான்கு மாத குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான மதுராந்தகம் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் உறவினர்கள் போலீசார் இந்த வழக்கை முறையாக கையாளவில்லை எனக்கூறி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை எதிரே சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுராந்தகம் மேம்பாலத்தில் சோகம் இரு பைக் நேருக்கு நேர் மோதலில் இரண்டு வாலிபர்கள் பரிதாப பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.