செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் திணறல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு என்பது அதிகமாக இருக்கும். ஆனால் வழக்கத்திற்க்கு மாறாக தை மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்து 10 நாட்களை கடந்த நிலையில் பனிப்பொழிவு என்பது குறையாமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிளில் நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. செங்கல்பட்டு நகர், திம்மாவரம், ஆத்தூர், பாலூர், ரெட்டிபாளையம், பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், திருக்கச்சூர், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாகவே காணப்பட்டது குறிப்பிடதக்கது.

குறிப்பாக சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் புகைமண்டலமாக மாறியதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், ஆம்னி பேருந்து, அரசு பேருந்து, லாரிகள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் திணறின. எனவே, முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன.

* மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்து 10 நாட்களை கடந்த நிலையில் பனிப்பொழிவு என்பது குறையாமல் அதிகரித்து வருகிறது.

The post செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: