இந்நிலையில், பிள்ளைச்சத்திரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க, அவரது சகோதரியின் கணவர் திருமலையுடன் பைக்கில் நேற்று முன்தினம் சென்றுவிட்டு மீண்டும் உளுந்தை கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேந்தமங்கலம் அருகே வந்த போது, மகேஸ்வரி எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.
The post திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பைக்கில் வந்த இளம்பெண் தவறி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.