மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர், பூதூர் கிராமத்தில் திறந்த ஜீப்பில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். இதனை தொடர்ந்து ஈசூர், சகாயநகர், கீழவலம், படாளம், வையாவூர், கள்ளபிரான்புரம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பழமத்தூரில் அமுலு பொன்மலருக்கு, கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு வேட்பாளர் அமுலு பொன்மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, வேட்பாளர் அமுலு பொன்மலர் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம், மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கோவிட் நிவாரண உதவித் தொகை, தமிழ் புதல்வன், மக்களை தேடி மருத்துவம், கலைஞர் காப்பீடு திட்டம், வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். எனவே, ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்று கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர் சத்யசாய், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், தனசேகரன், தமிழரசன், திருஞான செல்வம், தேவராஜ், மணியன், பார்த்தசாரதி, சுந்தரவரதன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அன்புச்செல்வன், ராஜேந்திரன், வாசு, ராஜா, சேக்கு தமிழரசன், முகிலன், சீனு, பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
