பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தக்கலையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாளைக்கு இங்க கன்னியாகுமரி வர்றாரு. வரும்போது கேளுங்க தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொடுத்தீங்கன்னு கேளுங்க.
மும்மொழிக் கொள்கைன்னு சொல்லிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குள்ள ஹிந்தித் திணிப்பை எப்படியாவது கொண்டு வரணும்ன்ற முயற்சியில இன்னைக்கு ஒன்றிய அரசு ஈடுபட்டுக்கிட்டு இருக்கு. அதனாலதான் நம்முடைய தலைவர் மீண்டும் மீண்டும் சொல்றது மாதிரி, நம்ம தமிழ்நாடு என்னைக்குமே ‘டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ தான் அப்படிங்கறதை இந்த தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். பிஜேபி தமிழ்நாட்டுக்குள்ள என்னைக்குமே நுழைய விடமாட்டோம். அவங்களுக்கும் தெரியும் நுழைய விடமாட்டோம்னு தெரியும்.
அதனாலதான் இன்னைக்கு அதிமுகங்கிற போர்வையைப் போர்த்திக்கிட்டு இன்னைக்கு பிஜேபி தமிழ்நாட்டுக்குள்ள எப்படியாவது நுழையணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்கள்ல பாஜ கண்ட்ரோல் எடுத்துட்டாங்க. ஆனா தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் நுழைய விடமாட்டேங்கிறோம். ஏன்னா தமிழ்நாடு என்னைக்குமே சுயமரியாதை மண். நாம யாருக்கும் அடிமையா இருக்க மாட்டோம். யாரா இருந்தாலும் கேள்வி கேட்போம்.
16ம் தேதி நாடாளுமன்றம் கூடியிருக்கு. எதுக்கு? தொகுதி மறுவரையறை ‘டீலிமிடேஷன்’ கொண்டு வராங்க. அது கொண்டு வந்தாங்கன்னா 39 தொகுதி நாடாளுமன்றத் தொகுதி தமிழ்நாட்டில் இருந்து குறைக்கப்பட்டு 32-ஆக்கப்படும். எண்ணிக்கையைக் குறைக்கிறாங்க. இத நம்முடைய முதலமைச்சர், இந்தியாவில் முதல் முதலமைச்சர், முதல் தலைவர், ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் பிரசனையை பேச ஆரம்பிச்சது நம்முடைய தமிழ்நாடுதான். இப்படி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டா இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சர் ஆக்கக்கூடிய தேர்தல்தான் வர்ற ஏப்ரல் 23. இவ்வாறு அவர் பேசினார்.
* மீனவர் பாதுகாப்பை மோடி உறுதி செய்தாரா?
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்னைக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒன்றிய அரசால மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகிக்கிட்டு இருக்காங்க.
எங்க மீன் பிடிக்கப் போனாலும் அடுத்த நாட்டு கடற்படையால தாக்கப்படுறாங்க. அதைத் தடுக்க ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்குது. மோடியை பார்த்து உலகமே பயப்படுதுன்னு சங்கீங்க சொல்லுவாங்க, ஆனா தமிழ்நாட்டினுடைய மீனவர்களோட பாதுகாப்பை அவரால உறுதி செய்ய முடியல. எனவே தமிழ்நாட்டு மீனவர்களோட பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மீண்டும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘உலகப் புகழ்பெற்ற போட்டோ ஆயிடுச்சு’
‘‘இந்த போட்டோவுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. நீங்கெல்லாம் கேக்குறதுனால காட்டுறேன். (திரையில் எடப்பாடி பழனிசாமி காலில் விழும் புகைப்படம் காட்டப்படுகிறது) கீழ வந்து படுத்திருக்கார்ல, அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். எவ்ளோ அழகாப் படுத்திருக்கார் பாருங்க! இப்படித்தான் அவர் முதலமைச்சரானார். இதத்தான் நான் சொன்னேன். இதுக்குத்தான் என்கிட்ட கோவிச்சுக்கிட்டாரு. இப்ப இது உலகப் புகழ்பெற்ற போட்டோ ஆயிடுச்சு. அதுக்குக் காரணம் நான் இல்ல, அதுக்குக் காரணம் அவர்தான்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
