சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல் ஒரு தலைமுறைக்கான தேர்தல். அதிமுகவுக்கு வாக்களித்துதான் இன்றைக்கு நாடு ஊழலில் திளைக்கிறது. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை துவக்கினார். ஆனால் அவரது மகன் ஜி.கே.வாசன் இன்றைக்கு குறைந்த விலைக்கு மோடிக்கு விற்று, அந்த 5 வேட்பாளர்களும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
அந்த கட்சி இன்றைக்கு கல்லறை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. கடமையை செய்யத்தான் சிங்கத்தமிழன் சீமான் சில்லரை வந்தார். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு எக்ஸ்ட்ரா கேரேஜ். தொங்கு சதை பெரியாரையும், அண்ணாவையும் அவமதிப்பதற்காக கூலி வாங்கிய ஓநாய். எடப்பாடி பழனிச்சாமி 10 கட்சிகளோடு கூட்டணி வைத்து இருக்கிறார். பாஜ இந்த மண்ணின் மகத்துவத்தையும், புனிதத்தையும் கெடுக்க நினைக்கிறது.
ரெட்டை இன்ஜின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நான் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கேட்கிறேன். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய். நிதிஷ்குமார் நிலைமை நாளை தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். பாஜ ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வர துடிக்கிறார்கள். அதிமுகவிற்காக வாக்களித்து பாவத்தை செய்து விடாதீர்கள். அதிமுகவை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
