அப்பா மனசை புண்படுத்தும் அன்புமணி நல்லது செய்வாரா? போட்டு தாக்கும் சசிகலா

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அஇபுதமமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரமக்குடிக்கு வரும் வழியில் அவரிடம் போனில் பேசினேன். ராமதாஸின் மனது புண்படும்படி அவரது மகன் நடந்து கொள்கிறார்.

அனைத்து தொகுதிகளுக்கும் நான் பிரசாரத்துக்கு செல்கிறேன், அதனால் கவலைப்பட வேண்டாம் என கூறினேன். இந்த காலத்தில் அப்பா-மகன், அம்மா-பிள்ளை பாசம் எல்லாம் சும்மா. அரசியல் என்பது மிகவும் ஆழமானது. அரசியலில் 38 வருடமாக நான் உள்ளேன். அரசியலில் எவ்வளவோ பிரச்னைகள் வரும். மக்களை நினைத்துக் கொண்டால் அந்த பிரச்னைகள் எல்லாம் சும்மா ஆகிவிடும். ராமதாஸ் 88 வயதில் அரசியல் பிரசாரம் செய்கிறார். அவரது மகன் இது மாதிரி அவரது மனதை புண்படுத்தினால் பொதுமக்களுக்கு எப்படி நல்லது செய்வார்? இவ்வாறு பேசினார்.

Related Stories: