இன்றும் விவசாயம் செய்கிறேன்: நிலமில்லாத எடப்பாடி பேச்சு

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் மற்றும் பெரியகுளம் தனித் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று ஆண்டிபட்டியில் டிடிவி.தினகரனோடு சேர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்தது.

இன்றும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயம் மிகவும் கடினமான தொழில். ரத்தத்தை கொடுத்து மக்களுக்கு உணவு படைக்கின்றவர் விவசாயி. இவ்வாறு பேசினார். போகிற இடமெல்லாம் நான் விவசாயி என்று சொல்லும் எடப்பாடி, வேட்பு மனுவில் தனக்கு விவசாய நிலம் என்று கூறியிருந்தார். நிலம் இல்லாதவர், இன்றும் விவசாயம் செய்கிறேன் என்ற ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்.

Related Stories: