பாஜ மேடையில் ஏறினால் ஓட்டு வராது; ஜே.பி.நட்டா பிரசாரத்துக்கு வராமல் அதிமுக வேட்பாளர்கள் ‘எஸ்கேப்’

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக நேரடியாக 6 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான பாமவும், ஒரு தொகுதியில் பாஜகவும் போட்டியிடுகிறது. அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, பாஜக முன்னாள் தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா நேற்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

கூட்டணி கட்சியின் தேசிய அளவிலான தலைவர்கள் பேசும் கூட்டங்களில், அந்த மாவட்டத்தில் உள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வேட்பாளர்களும் மேடையில் இருப்பது வழக்கம். கடந்த 4ம் தேதி ஆரணியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்திலும் அதிமுக கூட்டணியின் 8 வேட்பாளர்களும் மேடையில் இருந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் சி.ஏழுமலை மட்டுமே மேடையில் இருந்தார்.

ஆனால், அதிமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட பிரசாரம் நடந்த இடத்துக்கு வரவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், ஏற்கனவே மக்களிடம் கடும் அதிருப்தி இருக்கிறது. ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் வெளிப்படையாகவும் எதிர்ப்பு காட்டுகின்றனர். இந்த நேரத்தில், பாஜக பொதுக்கூட்டத்தில் மேடையேறினால், வருகிற ஓட்டும் வராமல் போகும் என்ற அச்சத்தால், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: