திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை ரோகினி பேசியதாவது: கொடைக்கானலில் நிறைய மினரல், தாதுக்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள தாதுக்களை கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிடுவார்கள். அதை நாம் தடுக்க ஒன்றிய அரசின் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அவர் கொண்டு வந்த திட்டங்களே சாட்சியாக உள்ளது. என்னை நெகிழ வைத்த மிகவும் கவர்ந்த திட்டம் காலை உணவு திட்டம். அதேபோல் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்கியது புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள். இவ்வளவு நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி மீண்டும் 5 ஆண்டுகள் தொடர்வதுதான் சிறந்தது. பிளவு வாதத்தை நுழையவிடக் கூடாது. அதற்கு திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
