1. கடலோரப் பகுதியான ராயபுரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு என்ன மாதிரியான திட்டம் வைத்துள்ளீர்கள்? ராயபுரம் தொகுதியின் பிரதான அங்கமான காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே திமுகவின் முக்கிய இலக்கு. தற்போது காசிமேட்டில் இருந்து பிடிபடும் மீன்கள் கேரளா வழியாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் அங்கீகாரம் பெற்ற சிறப்பு பொருளாதார மண்டலமாக காசிமேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மீனவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக லாபம் ஈட்ட முடியும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் கணிசமாக உயரும்.
2. கடந்த தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு பாஜ தான் காரணம் என்று ஜெயக்குமார் கூறினார். மீண்டும் பாஜ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார், மக்கள் வாக்களிப்பார்களா? 2021லேயே மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். பிஜேபி, சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே துரோகம் செய்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். இப்போது கூட நாடாளுமன்றத்தில் இடங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டதில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
50, 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல, இப்போதும் மக்கள் பிஜேபி மற்றும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவை நிராகரிப்பார்கள். எனவே, இம்முறை ராயபுரம் தொகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாஜ-அதிமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள். ராயபுரத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் இக்கூட்டணியைத் தோற்கடிப்பது உறுதி.
3. திமுகவின் தேர்தல் அறிக்கை முதல்வர் சூப்பர் ஸ்டார்னு சொல்கிறார்? மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா? உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்குமா? கடந்த முறை முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 சாத்தியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், இன்று 1.5 கோடி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போது தேர்தல் அறிக்கையில் ரூ.2,000 உரிமைத் தொகை மற்றும் ரூ.8,000 கூப்பன் போன்ற திட்டங்களை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ‘சொன்னதைச் செய்வார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, மக்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக நம்புகிறார்கள்.
4. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை சிறுபான்மையின வாக்குகளைப் பிரிக்குமா ? நிச்சயமாக இல்லை. அவர் பிஜேபியின் ‘பி-டீம்’ என்றுதான் பலரும் கருதுகிறார்கள். அவரிடம் தெளிவான கொள்கைகள் இல்லை, வெறும் ரசிகர் பட்டாளம் மட்டுமே உள்ளது. தமிழக மக்கள் யார் முதல்வராக வர வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று விரும்பும் மக்கள், தங்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள். புதிய கட்சிகளின் வருகை திமுகவின் வெற்றியைப் பாதிக்காது. எனவே, ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை.
