வாலை சுருட்டிட்டு இருந்தவங்க ரொம்ப ஆட்டம் போடுறாங்க… அதிமுக மாஜிக்கள் வின் பண்ணவே கூடாது: சசிகலா ஆவேசம்

அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் ராசுப்பிள்ளையை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மன்னார்குடி பெரியார் சிலை அருகே நேற்று இரவு பேசியதாவது: ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை முன்னாள் அமைச்சர்கள் வாலை சுருட்டி கொண்டிருந்தனர். அவரது மறைவுக்கு பிறகும் நான் இருந்தவரை அவ்வாறு தான் இருந்தனர்.

நான் பெங்களூருக்கு சென்ற பிறகு அவர்களின் ஆட்டம் எல்லை மீறிப்போய்விட்டது. அவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டப்படும். நன்னிலத்தில் போட்டியிடும் ஆர்.காமராஜ், வேதாரண்யத்தில் போட்டியிடும் ஓ.எஸ்.மணியன் போன்ற நபர்கள் எக்காரணத்தை கொண்டும் வெற்றி பெறக்கூடாது. அதற்கு மக்களும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: