மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி இணைந்து விரைவில் பிரசாரம்

‘‘எங்களது தேசிய தலைவர்கள் அனைவரும் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பிரசாரம் செய்வார். ராகுல் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரசாரம் செய்வார். ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் இணைந்து கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்யவார்கள். புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வந்த போது, தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் இருந்தது.

அதோடு ராகுல் காந்தி அவசரமாக கேரள மாநில பிரசாரத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் புதுச்சேரியில் ஒன்றாக, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வர ராகுல்காந்தி ஆர்வமாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகின்ற 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்ததாலும், ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்கான தேதிகள் முடிவு செய்து 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும்.

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி செயலாளர் வேணுகோபால் இரண்டு முதல் மூன்று நாட்கள் வருவார். கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் வந்து பிரசாரம் செய்வார்கள். தெலங்கானா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர் ஏற்கனவே சுற்றுப்பயணத்தில் உள்ளனர். மேலும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல தேசிய தலைவர்கள் கடைசி சில நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்வார்கள்’’ என்று கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார்.

Related Stories: