சொன்னாரு..! செஞ்சாரு..!! ஒலிம்பிக் அகாடமிகள்

சொன்னாரு: ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும். எல்லா விளையாட்டிலும் சாதிக்கக் கூடிய விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு உயர்நிலைப் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளுக்குச் சென்று வர பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என 2021ம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

செஞ்சாரு: ஒலிம்பிக் அகாடமிகள்: சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் ரூ.3.065 கோடி செலவில் புதிய மூன்று மாடி கட்டிடத்தில் சென்னை ஒலிம்பிக் அகாடமி நிறுவப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது. மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், திருச்சியில் ஒலிம்பிக் அகாடமியை நிறுவுவதற்கு ரூ.150 கோடி நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. முதல் கட்டமாக திருச்சியில் ஒலிம்பிக் அகாடமியை அமைத்திட ரூ.50 கோடி நிதி ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது. இப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த ஒலிம்பிக் அகாடமிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறவும், பதக்கங்களை வெல்லவும் லட்சியமாகக் கொண்ட வசதியாக உயர்திறன் விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான அமைகிறது.

விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்திற்கு தயார்படுத்திடவும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லவும் மிகவும் உறுதுணையாக இருக்கும் வகையில் இவை செயல்பட்டுவருகிறது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தமிழக விளையாட்டு வீரர்கள்: 26.07.2024 முதல் 11.08.2024 வரை பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பாரீஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்க தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை: அரசுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும். விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதில் தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் செயற்படவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. அந்த அறக்கட்டளை மூலம் தேசிய அளவிலான வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், சிறப்புப் பயிற்சிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் மற்றும் பல்வேறு செலவினங்களுக்கும் ரூ.33.59 கோடி இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: