தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர்: எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணிக்கு சால்வை அணிவித்து மக்கள் வரவேற்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, செங்கல்பட்டு தொகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதுபோல் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, கல்வாய், குமிழி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக அரசின் சாதனை குறித்து எடுத்து கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணிக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சால்வை, மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

ஊரப்பாக்கத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் எம்.ஜி.மூர்த்தி ஏற்பாட்டில், திறந்தவெளி ஜீப்பில் சோட்டா பீம் மற்றும் மிக்கி மவுஸ் வேடத்தில் விதி வீதியாக சென்று ஓட்டு கேட்டனர். இதில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோக நாதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஏவிஎம்.இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், ஊரப்பாக்கம் பவானி கார்த்தி, காரணைப்புதுச்சேரி நளினி ஜெகன், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீனிவாசன், கீரப்பாக்கம் செல்வசுந்தரி ராஜேந்திரன், குமிழி ராஜேஸ்வரி கோதண்டபாணி, காயரம்பேடு ஜெயகாந்தி புஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப்புதுச்சேரி பத்மநாபன், துணை தலை வர்கள் ரேகா கார்த்திக், வினோதினி ஞானசேகர், சுமதி லோகநாதன், கவிதா சத்யநாராயணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா ரவி, மோகனா கண்ணன், ஜே.கே.தினேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தேமுதிக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம்லீக், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்டிபிஐ, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: