மதவெறி சக்திகளுக்கு எதிராக திமுக அரசு உறுதி: மார்க்சிஸ்ட் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலை தனியார் அரங்கத்தில் சிறு தொழில் நடத்துவோர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பினால் சிறுதொழில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் ஒன்றிய மோடி அரசு வாய்மூடி மவுனமாக உள்ளது. அந்த அரசு தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்காது. திருப்பரங்குன்றம் தீபம் பிரச்னையை கடந்த 2 மாதங்களாக அணையாமல் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று பாஜ சொல்லி வருகிறது. எல்லா தீர்ப்புகளையும் ஆர்.எஸ்.எஸ், பாஜ மதிக்கிறதா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்து பிரசாரம் செய்தது. அதேபோல் பாபர் மசூதி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை தகர்த்தனர். எனவே நீதிமன்ற தீர்ப்பு இவர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்பது, மாறாக இருந்தால் எதிர்ப்பது என்பதுதான் இவர்கள் அணுகுமுறை. இத்தகைய மதவெறி சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜவின் கைப்பாவையாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: