திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: கனிமொழி தகவல்

நெல்லை: திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் என்று கனிமொழி தெரிவித்தார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கும். அவர்கள் ஒரு வாக்குறுதியை கொடுத்தால் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் உள்ளனர். திமுக கூட்டணிக்கு மேலும் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புதிய கட்சிகள் எவை என்பதை முதல்வர் முடிவு செய்வார். கருத்துக்கணிப்புகள் திமுக தான் ஆட்சியமைக்கும் என்று வந்தாலும், வராவிட்டாலும், தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு தான் சாதகமாக உள்ளது. நான், ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். எனினும் கூட்டணியை இறுதி செய்வதற்காக இல்லை. ஏனெனில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது. இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Related Stories: