ஆர்டிஐ சட்டம் ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டு மக்களின் அதிகாரத்தை வலுப்படுத்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பதை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் வாயிலாகச் சாமானிய மக்களும் அதிகாரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பரவலாக்கப்பட்டது. தற்போது படிப்படியாக இந்தச் சட்டம்வலுவிழந்து கொண்டிருக்கிறது.
தற்போது நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை மூலம் சட்டம் முடிவுக்கு வருகிறதோ என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்திருக்கிறது. இந்தச் சட்டத்தின் வாயிலாக ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எளிதில் அறிந்து கொள்கிறார்கள் என்கிற அச்சத்தால் அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே எக்காரணத்தைக் கொண்டும் தகவல் வரும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யாமல் வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.

Related Stories: