நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் விரிசல்கள் ஏதுமில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக தலைமையில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும். அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வரவார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மோடிக்கு கொத்தடிமையாக இருந்து வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற நாள் முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார். வஞ்சகத்தோடு செயல்படும் ஆளுநர் பதவியில் நீடிக்க கூடாது. அவரது பதவியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
