சென்னை: தமாக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த 22 வயதுடைய இளம்பெண், இந்த கொடுமையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுகைளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்து, அது பொது வெளியில் தெரியும் பட்சத்தில் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
