தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? தயாரிப்பாளர் விளக்கம்

சென்னை: நடிகர் அஜித் படங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்திற்காக அவர் பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் அடிக்கடி வருகிறது. குறிப்பாக தனுஷ் இயக்கத்தில் அஜித் ஒரு படம் நடிக்கப்போவதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் இது பற்றி டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் தற்போது அளித்திருக்கும் பேட்டியில், ‘அஜித், தனுஷ் கூட்டணி சேரும் படம் தற்போது பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை’ என தெரிவித்து இருக்கிறார்.

Related Stories: