சாந்தி நடித்துள்ளனர். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, சமந்த் நாக் இசை அமைத்துள்ளார். பொத்துவில் அஸ்மின் பாடல்கள் எழுத, விது ஜீவா எடிட்டிங் செய்துள்ளார். டிரைலருக்கு ஷாஜகான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபாகரன் வெளியிட்டார்.
விக்னேஷ் பாண்டியன் பேசுகையில், ‘என்னை முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் முருகன், ஒருநாள் கூட ஷூட்டிங்கிற்கு வந்ததில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற கருத்தை மையப்படுத்தி கதை எழுதியுள்ளேன். நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஷான் லிப்லாக் காட்சி மற்றும் காதல், காமெடி கலந்து முழுநீள கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளேன்’ என்றார்.