மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் விமான நிலைய ஊழியர்களுடன் நடிகை மன்னாரா சோப்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் காவல் படத்தில் நடித்தார் மன்னாரா சோப்ரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்கு செல்ல இவர், மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலைய ஊழியர்கள் இவரை தடுத்து நிறுத்திவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
இது பற்றி மன்னாரா சோப்ரா கூறும்போது, ‘‘என்னிடம் ஆதார் கார்டு, டிக்கெட் உள்பட எல்லாமே சரியாக இருந்தும் என்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இண்டிகோ ஊழியர்களும் விமான நிலைய ஊழியர்களும் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் ஒரு மணி நேரம் நான் விமானத்தில் ஏஹ முடியாமல் தவித்தேன். நான் பிரபல நடிகை என்று கூறியும், அது பற்றி அவர்களுக்கு தெரிந்தும் சந்தேகத்தின் பேரில் எனக்கு இடைஞ்சல் தந்தனர்’’ என கூறியுள்ளார். முன்னதாக ஊழியர்களுடன் அவர் வாக்குவாதம் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.