ஆபாச வீடியோ விவகாரம்: நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம்

சென்னை: ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிட்டதாக இணையத்தில் பரவியது. அது நிஜமான வீடியோ என ஒரு தரப்பும், இல்லை போலியான வீடியோ என்று ஒரு தரப்பும் கூறி வந்தது. ஆடிஷனில் தமிழ் சினிமாவை சேர்ந்த காஸ்டிங் கோச் நபர் ஒருவர், இந்த வீடியோவை எடுத்ததாக கூறப்பட்டது. 4 நாட்களாகியும் இந்த வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். எப்படி ஏஐ மூலமாக அச்சு அசலாக ஒருவரை போல இன்னொரு நபரை உருவாக்க முடியும் என அந்த வீடியோவில் இருக்கிறது. இதன் மூலம் அந்த அந்தரங்க வீடியோ ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டது தான் என அவர் மறைமுகமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Related Stories: