ஒருமையில் பேசியதால் டேவிட் வார்னரிடம் நடிகர் மன்னிப்பு

ஐதராபாத்: மேடையில் ஒருமையில் பேசியதால் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரிடம் நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்டார். நிதின், ஸ்ரீலீலா நடிக்கும் ‘ராபின்ஹுட்’ தெலுங்கு படத்தில் நடிகராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் வந்து பேசிய நடிகர் ராஜேந்திர பிரசாத், வார்னரை ஒருமையில் பேசினார். இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பிரசாத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். நம் நாட்டுக்கு வந்துள்ள டேவிட் வார்னர், நமக்கு விருந்தாளி. அவரை இப்படித்தான் அசிங்கப்படுத்துவீர்களா என ராஜேந்திர பிரசாத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘டேவிட் வார்னர் எனக்கு மகன் போன்றவர். அந்த பாசத்தில்தான் அப்படி சொல்லிவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என ராஜேந்திர பிரசாத் பேசியுள்ளார்.

Related Stories: