தொழிலதிபர் மகளுடன் நடிகர் பிரபாஸ் நிச்சயதார்த்தம்?

ஐதராபாத்: தொழிலதிபர் மகளுடன் நடிகர் பிரபாசுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் பரவியுள்ளது. பிரபாசுக்கு இப்போது 45 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்யவில்லை. நடிகை அனுஷ்காவுடன் காதல் தொடர்வதும் அதற்கு பிரபாசின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளதாகவும் நேற்று முன்தினம் இரவு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல் பரவியது. இந்த தகவலை கேட்டு அனுஷ்கா அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், டோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பிரபாஸ் குடும்பத்தினர் தரப்பில் இந்த தகவல் உண்மையல்ல என மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: