சென்னை: ‘ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குனர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ராஜ்குமார், இலங்கை நடிகை மிச்சலா, யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்.இளங்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ’சேஸிங்’ படத்தை இயக்கிய கே.வீரக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுதியுள்ளார். ‘அய்யோ சாமி..’ ஆல்பம் பாடல் புகழ் சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை பொத்துவில் அஸ்வின் எழுதியிருக்கிறார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவாகிறது.