கிண்டல் செய்த ரசிகர் பதிலடி தந்த ராஷ்மிகா

சென்னை: நடிகை ராஷ்மிகா, எந்த மொழியில் படங்கள் நடித்தாலும் மாஸ் ஹிட் படத்தை கொடுக்கிறார். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரது பயணம் தெலுங்கு, தமிழ் இப்போது பாலிவுட் என உயர்ந்து கொண்டே செல்கிறது. நேஷனல் க்ரஷ் என்ற பெயருக்கு ஏற்றவாரு இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் இந்தியில் சாவா என்ற படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி கண்டது.

இப்படம் ரூ.760 கோடி வசூலித்துள்ளது. அடுத்து சல்கான் கானுடன் ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் ராஷ்மிகாவின் புகைப்படத்திற்கு கீழே, ‘நடிப்பு திறமை இல்லாத ஒரு அழகி’ என பதிவு போட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா, ‘ஆனால் நீங்கள் அழகி என கூறியுள்ளீர்கள், அதை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: