கடிகாரத்தில் ராம ஜென்மபூமி கோயில் சிற்பத்துடன் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2டி டைட்டானியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதனை வடிவமைத்த எதோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சல்மான் கான் அணிந்திருக்கும் கடிகாரம் 44 மிமீ அளவு கொண்டதாகும். இக்கடிகாரத்தை கடந்த ஆண்டுதான் எதோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ராம ஜென்மபூமி டிசைனில் இரண்டு கடிகாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தியா கேட், கேட்வே ஆஃப் இந்தியா, தாஜ்மகால் மற்றும் குதுப்மினார் ஆகியவற்றை பிரிதிபலிக்கும் வகையில் கடிகாரங்களை எதோஸ் நிறுவனம் வெளியிட்டு கெளரவித்துள்ளது.
சல்மான் கானின் ரூ.34 லட்சம் ராமர் கோயில் வாட்ச்: இணையத்தில் வைரல்
