மும்பை: விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த இந்தி திரைப்படம் ‘சாவா’. இப்படம் உலகளவில் ரூ.760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் ரூ.550 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால், இந்த படத்தை அவர் நிராகரித்துவிட்டார். காரணம், அந்த சமயத்தில் ‘பேபி ஜான்’ இந்தி திரைப்படத்தில் அவர் நடித்து வந்தார். அது தனது நெருங்கிய நண்பரான அட்லி தயாரிக்கும் படம் என்பதால்தான் ‘பேபி ஜான்’ படத்துக்காக ‘சாவா’ படத்தை கீர்த்தி நிராகரித்துள்ளார். ஆனால், பேபி ஜான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. கீர்த்தி நிராகரித்த சாவா படம் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் இப்போதுதான் வெளியாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.