சென்னை: பாலியல் சீண்டல்கள் தொடர்பாக நடிகைகள் இழப்புகளை பற்றி கவலைப்படாமல் புகார் சொல்ல வேண்டும் என நடிகை சன்னி லியோன் கூறினார். பாலிவுட்டில் நடித்து வந்த சன்னி லியோன், தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார். பின்னர் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ‘கோட்டேஷன் கேங்’, ‘வீரமாதேவி’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபுதேவாவுடன் ‘பேட்ட ராப்’ படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள். முன்னணி நடிகைகள் சிலர் கூட இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவா ஆகியோர் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு பேசிய சன்னி லியோன், ‘‘பாலியல் சீண்டல்கள், பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதைக் கூற நடிகைகள் துணிச்சலாக முன் வரவேண்டும். இழப்புகளை கண்டு அஞ்சக்கூடாது. நோ என்றால் நோதான் அதில் எந்த சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையை தீர்மானிப்பது நமது கையில்தான் இருக்கிறது. அந்த உரிமையை நாம் இழக்கக் கூடாது’’ என்றார். இது பற்றி பிரபுதேவா கூறும்போது, ‘‘நீண்ட காலமாகவே இது சினிமா உலகில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டியது அவசியமாகிறது’’ என்றார்.
The post ஹேமா கமிட்டி விவகாரம் இழப்புகளை பற்றி நடிகைகள் பயப்படக்கூடாது: சன்னி லியோன், பிரபு தேவா ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.