ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிய துருவா

தமிழில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருப்பவர், அர்ஜூன். பெங்களூருவில் வசிக்கும் அவரது சகோதரியின் மகன் துருவா சர்ஜா, கன்னடத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது அவர் நடித்துள்ள ‘கேடி: தி டெவில்’ என்ற பான் இந்தியா படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது. ஆரம்பகாலத்தில் காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த துருவா சர்ஜா, தற்போது அதிரடி ஆக்‌ஷன் வேடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கன்னட ரசிகர்கள் அவரை ‘ஆக்‌ஷன் பிரின்ஸ்’ என்று வர்ணிக்கின்றனர். காளி என்ற கேரக்டரில் துருவா சர்ஜா நடித்துள்ள ‘கேடி: தி டெவில்’ படத்தை பிரேம் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் ரீஷ்மா நானையா, ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் நடித்துள்ளனர். அர்ஜூன் ஜன்யா இசை அமைத்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Related Stories: