பையா 2வில் ஜான்வி கபூர் இல்லை : போனி கபூர் மறுப்பு

பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என போனி கபூர் மறுத்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த படம் பையா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை லிங்குசாமி எழுதி வருகிறார். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். ஹீரோயினாக நடிக்க ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளதாக தகவல் பரவியது.

இதை அறிந்து கோபம் அடைந்த போனி கபூர் தனது டிவிட்டரில் கூறும்போது, ‘ஜான்வி கபூர் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் படத்தில் நடிக்கப்போவதாக வதந்தி பரப்பாதீர்கள். அவ்வப்போது இதுபோல் பொய் கதைகளை பரப்புவது சிலருக்கு வேலையாக இருக்கிறது’ என்றார்.

இதுபற்றி பையா 2 படத்தின் தரப்பில் கேட்டபோது, இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளே இப்போதுதான் தொடங்கியுள்ளது. ஆர்யா இதில் நடிக்கலாம். அதே சமயம், ஹீரோயின் முடிவாகவில்லை. ஜான்வி கபூர் நடிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. முழு கதையும் உருவான பிறகே படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கான தேர்வு நடைபெறும் என்றனர்.

Related Stories: