ஜமுனா கேரக்டரில் தமன்னா

சீனியர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜமுனா, தனது 86வது வயதில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஜனவரி 27ம் தேதி மரணம் அடைந்தார். தமிழில் ‘தங்கமலை ரகசியம்’, ‘நிச்சயதாம்பூலம்’, ‘மருத நாட்டு வீரன்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘தெனாலிராமன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு உள்பட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜமுனாவின் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படம் சம்பந்தமாக ஜமுனா உயிருடன் இருந்தபோதே அவரிடம் சொல்லப்பட்டு, அவர் கொடுத்த சில ஐடியாக்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுள்ளது. ஜமுனாவின் சினிமா மற்றும் அரசியல் பிரவேசம், என்.டி.ராமாராவுடன் ஏற்பட்ட மோதல் உள்பட பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் இடம்பெறும்

 இப்படத்தில், ஜமுனா கேரக்டரில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே நடிகைகள் சில்க் ஸ்மிதா, சாவித்திரி, பானுமதி ராமகிருஷ்ணா, ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Related Stories: