ராஷ்மிகாவுக்கு இதெல்லாம் அலர்ஜி

‘வாரிசு’ ரிலீசுக்குப் பிறகு தமிழில் ராஷ்மிகாவுக்கு புதுப்படம் இல்லை. எனவே, தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வரும் அவர் கூறுகையில், ‘எனக்கு காலைநேர சிற்றுண்டியில் ஆம்லெட் இருக்க வேண்டும். உணவில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன். அரிசி சாதம் சாப்பிடுவதைக் குறைத்துவிட்டேன். தோசை என்றால் எனக்கு உயிர். மதிய நேரத்தில் ரசம் சாதம் சாப்பிடுவேன். தென்னிந்திய உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன். இரவு நேரம் நிறைய சாப்பிட மாட்டேன். வள்ளிக்கிழங்கு, தக்காளி, கேப்ஸிகம் போன்றவை எனக்கு அலர்ஜி. பல விஷயங்களில் மிகச்சரியாக இருக்கும் நான், சரியான நேரத்துக்குத் தூங்கி, அதிகாலையில் எழுந்துகொள்வதை இன்னும் பின்பற்றவில்லை. படப்பிடிப்பு இருந்தால், காலையில் எழுந்து குளித்துவிட்டு, ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வேன். கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டேன். தினமும் ஓடிடியில் எனக்கு மிகவும் பிடித்த வெப்சீரிஸ் அல்லது தியேட்டரில் பார்க்க முடியாத படத்தைப் பார்த்து ரசிப்பேன். சமூக வலைத்தளங்களில் என்னை வேண்டுமென்றே கிண்டல் செய்பவர்களைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்’ என்றார்.

Related Stories: