வெங்கடேஷின் 75வது படம் ‘சைந்தவ்’

வெங்கடேஷ் நடிக்கும் பான் இந்தியா படம், ‘சைந்தவ்’. இது அவரது 75வது படமாகும். ‘ஹிட்: பர்ஸ்ட் கேஸ்’, ‘ஹிட்: செகண்ட் கேஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து சைலேஷ் கொலனு இயக்குகிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெங்கட் போயனபள்ளி தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தின் பிரத்தியேக காணொளியில், அடர்ந்த தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றும் வெங்கடேஷின் பின்னணியில் கார் வெடித்துச் சிதறும் காட்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும், சந்திரபிரஸ்தா என்ற கற்பனை நகரத்தில், மருந்து குப்பி கொண்ட குளிர்பானப் பெட்டியுடன் துறைமுகத்திற்குள் நுழையும் வெங்கடேஷ், பிறகு ஒரு கொள்கலனில் இருந்து துப்பாக்கியை வெளியே எடுக்கிறார். கடைசியில், தன்னால் கடுமையாகத் தாக்கப்பட்ட குண்டர் குழுவைப் பார்த்து கடுமையாக எச்சரிக்கிறார். இக்காட்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories: