கல்லூரியில் கைக்குழந்தையுடன் கவின்

‘லிப்ட்’ படத்தை தொடர்ந்து கவின் நடித்துள்ள படம், ‘டாடா’. கணேஷ் கே.பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். கவின் தந்தையாக கே.பாக்யராஜ், தாயாக ஐஸ்வர்யா மற்றும் ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.

 ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வரும் பிப்ரவரி 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கவின் கூறுகையில், ‘கைக்குழந்தையுடன் கல்லூரிக்கு படிக்கச் செல்லும் ஒரு மாணவனின் கதையாக உருவாகியுள்ளது. மாணவன் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். வழக்கமான குணாதிசயங்கள் கொண்ட கேரக்டர் என்றாலும், இதில் என் பாடிலாங்குவேஜ் மற்றும் மேனரிசங்களை மாற்றி நடித்துள்ளேன்.

 ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் நடித்திருந்த மலையாள நடிகை அபர்ணா தாஸ் எனக்கு ேஜாடியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ், ‘வாழ்’ பிரதீப் ஆண்டனி நடித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் கே.பாக்யராஜிடம் இருந்து நடிப்பு சம்பந்தமாக பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிந்தது’ என்றார். ‘டாடா’ என்பது ‘டாடி’ என்பதன் செல்லப்பெயர்.

Related Stories: