சென்னை: தமிழில் வெளியான ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’, ‘கொம்புசீவி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்த சண்முக பாண்டியன், அடுத்து மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’, ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘மதில்’, ‘அரியவன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள மித்ரன் ஆர்.ஜவஹர், தற்போது மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து அவரது இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள படத்தை, ‘கொம்புசீவி’ என்ற படத்தை தயாரித்த ஸ்டார் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் பிரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தவிர, திரு இயக்கும் படத்தில் நடிக்கவும் சண்முக பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார்.
