குற்றம் புரிந்தால்

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம், ‘குற்றம் புரிந்தால்’. இதற்கு முன்பு ‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு, பெங்களூரு அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.சங்கர், ராம், ரேனிகுண்டா நிஷாந்த் நடிக்கின்றனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார். கபிலன், கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகின்றனர். மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு விரக்தி அடைந்த ஒருவன், தானே நீதியைக் கையிலெடுக்கிறான்.

கொலையாளிகளை மட்டுமின்றி, அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்துச் செல்ல காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறிவைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து படமாக்கியுள்ளனர். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கோலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளாக 70 படங்களுக்கு மேல் புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றிய ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ள இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

Related Stories: