நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ஒரே நேரத்தில் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் உருவாக்கப்படும் படம், ‘டாக்ஸிக்’. இதில் எலிசபெத் என்ற கேரக்டரில் ஹூமா குரேஷி நடித்துள்ளார். அவரது பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஹூமா குரேஷி, இதற்கு முன்பு தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித் குமாரின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு யஷ் நடிக்கும் இப்படத்துக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது யஷ் நடிக்கும் 19வது படமாகும். கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் நடிக்கின்றனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. வரும் மார்ச் 19ம் தேதி படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் கியாரா அத்வானியின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது ஹூமா குரேஷியின் லுக் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பற்றிய கதை கசிந்துள்ளது. அதாவது, ட்ரக்ஸ் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
