சல்மான்கான் பார்ட்டியில் முன்னாள் காதலி

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் நேற்று தனது 60வது பிறந்தநாளை, மும்பை புறநகரிலுள்ள பன்வெல் பண்ணை வீட்டில் கொண்டாடினார். கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான்கானின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர், ரகுல் பிரீத் சிங், தபு, ஹூமா குரேஷி, மகேஷ் மஞ்ச்ரேகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஜெனிலியா தேஷ்முக் ஆகியோருடன் சல்மான்கானின் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி, மிகா சிங் கலந்துகொண்டனர். இரவில் தொடங்கிய பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நீடித்தது.

நள்ளிரவில் பண்ணை வீட்டில் இருந்து வெளியே வந்த சல்மான்கான், பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மூத்த பெண் பத்திரிகையாளரை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டார். தற்போது சல்மான்கானுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற மாஃபியாவால் அச்சுறுத்தல் இருந்து வருவதால், பண்ணை வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: