வட சென்னை 2ம் பாகத்துக்கு தயார்: ஆண்ட்ரியா

புதுச்சேரி: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம், ‘வட சென்னை’. இதில் அமீர் ேஜாடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என்று வெற்றிமாறன், தனுஷ் ஆகியோர் அடிக்கடி சொல்லி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா கூறியதாவது: தற்போது கவினுடன் ‘மாஸ்க்’ படத்தில் நடிக்கிறேன். சமீபகாலமாக நான் பாடல்கள் எதுவும் பாடவில்லை. விரைவில் புதிய படங்களில் ஒப்பந்தமாவேன், பாடல்களும் பாடுவேன்.

வரலாற்றுக் கதைகளில் நடிக்கும் ஆசை எனக்கு இல்லை. கண்டிப்பாக நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆசைப்பட்ட திரில்லர், ஹாரர், காதல், அட்வென்ச்சர் உள்பட அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துவிட்டேன். ‘வட சென்னை’ படத்தில் நான் ஏற்றிருந்த சந்திரா கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘வட சென்னை’ 2ம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் சொன்னது பற்றி எதுவும் தெரியாது. அதை வெற்றிமாறனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஒருவேளை, ‘வட சென்னை 2’ படம் உருவானால், கண்டிப்பாக சந்திரா கேரக்டரில் நடிப்பேன். மீண்டும் சந்திரா வருவாள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

The post வட சென்னை 2ம் பாகத்துக்கு தயார்: ஆண்ட்ரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: