ஆடி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

ஆடி 1,  ஜூலை 17, செவ்வாய்  

Advertising
Advertising

பஞ்சமி. ஆடிப் பண்டிகை. திருமலை திருப்பதியில் மரீசி மகரிஷி ஜெயந்தி. ஸ்கந்த பஞ்சமி விரதம். ஸமீகெளரி விரதம். கும்பகோணம் கும்பேஸ்வரர்,  மங்களாம்பிகை, பழநி பெரிய நாயகியம்மன் லட்சார்ச்சனை. நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கச் சப்பரத்தில் பவனி,  மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. தக்ஷிணாயன புண்யகாலம்.

ஆடி 2, ஜூலை 18, புதன்  

குமார சஷ்டி. சஷ்டி விரதம். மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் காமதேனு வாகனத்தில்  திருவீதியுலா. ராமநாதபுரம் கோதண்ட ராமஸ்வாமி திருக்கல்யாண வைபவம்.

ஆடி 3, ஜூலை 19, வியாழன்.

சப்தமி திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை செளந்திரராஜப் பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம்.  சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்மவாகனத்தில்  திருவீதியுலா.

ஆடி 4, ஜூலை 20, வெள்ளி  

அஷ்டமி. பெருமிழலைக் குறும்பர் ஆராதனை. வேளூர், சீர்காழி, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவையாறு தலங்களில் அம்பாளுக்கு சந்தனக் காப்பும் நவசக்தி  அர்ச்சனையும். பின்னிரவு விடியலில் திருநாவலூரில் ஸ்ரீசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஐக்கியம். இலந்தை முத்துமாரியம்மன் துவஜாரோகணம். திருமாலிருஞ்சோலை  கள்ளழகர் கிருஷ்ணாவதார திருக்கோலம். ராமநாதபுரம் கோதண்ட ராமஸ்வாமி குதிரை வாகனத்தில் பவனி. வடமதுரை செளந்திரராஜப் பெருமாள் அன்ன  வாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஆடி 5, ஜூலை 21, சனி  

உபேந்திர நவமி. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சேரமான் பெருமாள்ஆராதனை. தருமையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மாருடன் கைலாயம்  செல்லும் காட்சி. சிங்கிரி கோயில் உக்ரநரசிம்மர் பவித்ர உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஏகாம்பரநாதர் சுந்தரமூர்த்தி ஸவாமிகள் வெள்ளை யானை உற்சவம்.  ராமநாதபுரம் கோதண்டராமர் தேரோட்டம். மதுரை மீனாட்சி புஷ்பப்பல்லக்கில் பவனி. 

ஆடி 6, ஜூலை 22, ஞாயிறு  

தசமி. கும்பகோணம் ஆராவமுதன் பவித்ரோற்சவ கருடசேவை. திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். ராமநாதபுரம் கோதண்டராமர்  தோளுக்கினியானில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. திருமாலிருஞ்சோலை  கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

ஆடி 7, ஜூலை 23, திங்கள்  

ஸர்வ ஏகாதசி. தட்சிணபண்டரிபுரம் கோவிந்தபுரம் மகாபிஷேகம். சிங்கிரி ஸ்ரீநரசிம்மர் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி  மாளிகைக்கு எழுந்தருளல். கோவர்த்தன விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பல்லக்கில் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.

ஆடி 8, ஜூலை 24, செவ்வாய்  

துவாதசி. கோட்புலியார், கலியனார் ஆராதனை. சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். திருப்பதி கோவிந்தராஜர் ஜேஷ்டாபிஷேகம். சிங்கிரி நரசிம்மர் பவித்ரோற்சவம்.  திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காளிங்க நர்த்தன கோலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. மதுரை மீனாட்சியம்மன்  கனகதண்டியலில் பவனி, திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

ஆடி 9, ஜூலை 25, புதன்
 

திரயோதசி. பிரதோஷம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் ரதோற்சவம். வடமதுரை செளந்திரராஜர்  திருக்கல்யாணம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

ஆடி 10, ஜூலை 26, வியாழன்
 

பவித்ர சதுர்த்தசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர்  வெண்ணெய்த்தாழி சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகன சேவை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல்  தரிசனம்.

ஆடி 11, ஜூலை 27, வெள்ளி  

பெளர்ணமி. சந்திர கிரஹணம். (இரவு 11.54 மணி முதல் அதிகாலை 3.40 வரை) வாஸ்து நாள். காலை மணி 6.52 முதல்  8.22 வரை. திருவள்ளூர், காஞ்சி வரதர்  தலங்களில் ஆடி கருடன் விழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு. திருமாலிருஞ்சோலை, வடமதுரை தலங்களில் தேரோட்டம்.

ஆடி 12, ஜூலை 28, சனி  

ஆஷாட பகுள பிரதமை. திருவோண விரதம். கோயம்பேடு ஸ்ரீவிகனஸ ஆசாரியன் சாற்றுமுறை. புதுக்கோட்டை அவதூத சதாசிவாள் ஆராதனை. சாத்தூர்  ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள் புறப்பாடு.  

ஆடி 13, ஜூலை 29, ஞாயிறு  

துவிதியை. காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி. வடமதுரை ஸ்ரீசெளந்திரராஜப் பெருமாள் வஸந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் புறப்பாடு.  கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆடி 14, ஜூலை 30, திங்கள்  

திருதியை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள்  திருக்கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஆடி 15, ஜூலை 31, செவ்வாய்  

சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஆடி 16, ஆகஸ்ட் 1, புதன்  

பஞ்சமி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்,

ஆடி 17, ஆகஸ்ட் 2, வியாழன்  

சஷ்டி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் திருவிதிவுலா.

ஆடி 18, ஆகஸ்ட் 3, வெள்ளி  

சப்தமி. சகல நதி தீரங்களிலும் ஆடிப்பெருக்கு. தஞ்சை புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் பூச்சொறிதல் விழா. ஸ்ரீஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள் ஜெயந்தி. இருக்கன்குடி  ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் சேதுமாதவர் சந்நதிக்கு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை  விழா.

ஆடி 19, ஆகஸ்ட் 4, சனி  

அஷ்டமி. வேளூர், சீர்காழி, திருக்கடவூர், திருவையாறு, நாகை, மதுரை தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருவாடானை,  நயினார் கோவில் இத்தலங்களில் உற்சவாரம்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி. திருநள்ளாறு  சனிபகவான் சிறப்பு ஆராதனை.

ஆடி 20, ஆகஸ்ட் 5, ஞாயிறு  

நவமி. ஆடிக்கிருத்திகை. மூர்த்தியார், புகழச்சோழர் ஆராதனை. திருத்தணி தெப்பம். சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் திருத்தலத்தில் ஆடிக்கிருத்திகை  உற்சவம் ஆரம்பம். கார்த்திகை விரதம்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரம்மோற்சம் ஆரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.

ஆடி 21, ஆகஸ்ட் 6, திங்கள்
 

தசமி. வேளூர் கிருத்திகை. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கிலும், இரவு தங்கக் கேடயத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர  பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா.

ஆடி 22, ஆகஸ்ட் 7, செவ்வாய்  

ஏகாதசி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சக்தி அழைப்பு விழா. உருள் தாண்டவக் காட்சி. நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் பெரிய கிளி வாகனத்தில்  பவனி, மாலை வேணுகோபாலர் அலங்காரம்.

ஆடி 23. ஆகஸ்ட் 8, புதன்  

துவாதசி.  ஹரிவாசரம். கூற்றுவனார் ஆராதனை. ஸ்ரீகாஞ்சி ஆசார்யாள் மடத்தில் வைதீக பிக்ஷாவந்தனம். நயினார்கோவில் ஸ்ரீசெளந்திரநாயகி  வேணுகான  கிருஷ்ணன் மூர்த்திகளுக்கு அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ரங்கமன்னார் கோவர்த்தன கிரியிலும் பவனிவரும் காட்சி.

ஆடி 24, ஆகஸ்ட் 9, வியாழன்  

திரயோதசி. பிரதோஷம். மாத சிவராத்திரி. சென்னை சைதை காரணீஸ்வரர் கோயிலில் ஸவர்ணாம்பிகை தேவிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை. ராமேஸ்வரம்  ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி.

ஆடி 25, ஆகஸ்ட் 10, வெள்ளி  

சதுர்த்தசி. போதாயன அமாவாசை. பழநி பெரிய நாயகியம்மன் வெள்ளித் தேர். திருக்கழுக்குன்றம் திருத்தேர். திருவஹிந்திரபுரம், சிங்கிரி தலங்களில் பூலங்கி  சேவை. தருமை ஸ்ரீமகாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் திருவிளக்கு பூஜை. ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் நந்தி சந்தனக்காப்பு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன்  பெருந்திருவிழா, திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த் தாழி சேவை. இரவு கமல வாகனத்தில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ரதோற்சவம்.

ஆடி 26, ஆகஸ்ட் 11, சனி  

ஆடி அமாவாசை. சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கம் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் காலையில் தங்கப்பல்லக்கில் பவனி.

ஆடி 27, ஆகஸ்ட் 12, ஞாயிறு  

பிரதமை. ச்ராவண மாதம் ஆரம்பம். சந்திர தரிசனம். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் கண்ணாடிப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை  மாரியம்மன் கோயில் உற்சவம்.

ஆடி 28, ஆகஸ்ட் 13, திங்கள்  

துவிதியை. ஆடிப்பூரம், ஸ்ரீஆண்டாள் அவதார தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரதம். திருவஹீந்திரபுரம் தேவநாதர், ஆண்டாள் திருமஞ்சனம். பின்,  பெருந்தேரில் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாய தாக்ஷியம்மன் பீங்கான் தேரோட்டம். சரஸ்வதி அலங்காரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் புஷ்பக  விமானத்தில் பவனி.

ஆடி 29, ஆகஸ்ட் 14 ,செவ்வாய்  

திருதியை. திருக்கழுக்குன்றம் மகாபிஷேகம். திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம்.  துர்வா கணபதி விரதம், சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வசந்த  உற்சவம். திருவாடானை ஸ்நேகவல்லியம்மன், நயினார் கோயில் செளந்தரநாயகி தலங்களில் தபசுக்காட்சி.

 

ஆடி 30, ஆகஸ்ட் 15, புதன்  

சதுர்த்தி. கருட நாக பஞ்சமி. சுரைக்காய் சுவாமிகள் குருபூஜை. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழாத் தொடக்கம். அரவிந்தர் அவதார தினம்.  இந்திய சுதந்திர தினம்.

ஆடி 31, ஆகஸ்ட் 16, வியாழன்  

குமார சஷ்டி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், நயினார்கோவில் செளந்திரநாயகி இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல்.

Related Stories: