மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.