காக்களூர், புட்லூர் பகுதியில் ரூ.6.15 கோடியில் புதிய சாலைப் பணிகள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: காக்களூர், புட்லூர் பகுதிகளில் ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் ரூ.2.40 கோடி மதிப்பில் 2 கி.மீ. புதிய சாலை மற்றும் புட்லூர் ஊராட்சியில் புட்லூர் மேம்பாலம் முதல் அரண்வாயல் மேம்பாலம் வரை ரூ.3.75 கோடி மதிப்பில் 3 கி.மீ. புதிய சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராமச்சந்திரன், தரணி, சீனிவாசன், தயாளன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சவுந்தரராஜன், தியாகராஜன், சுகுமார், சரவணன், புட்லூர் லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, காக்களூர் மற்றும் புட்லூர் பகுதியில் ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

அப்போது, புட்லூர் கிராமத்தில் பூந்தமல்லி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 2 பேருந்து நிழற்குடை அமைத்து தரப்படும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் இரா.தாஸ், அப்புன்ராஜ், விஜயா ஆனந்த், ஜெயக்குமார், அசோக்குமார், நாதன், தினேஷ்குமார், அருண் கீதன், சங்கர், பிரபு, சிவா, முருகன், சதீஷ், தியாகு சந்தா, ஜனா, கார்த்தி, பூபாலன், சரண், கார்த்தி, தினேஷ், அமரேஷ், சந்திரசேகர், சந்திரன், செந்தில், இளங்கோ, ஆகாஷ், எத்திராஜ், ஜெகதீசன், நதியா, மகாதேவி, மகிமைதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காக்களூர், புட்லூர் பகுதியில் ரூ.6.15 கோடியில் புதிய சாலைப் பணிகள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: