பாரம்பரிய உணவுகளான கருப்புகவுனி, திணை, சாமை, வரகு, ராகி, கம்பு, கேழ்வரகு, சோளம், கொண்டைக்கடலை, தட்டைப் பயிறு பாசிப்பருப்பு போன்ற சிறு தானிய உணவுகள், பழங்கள், கீரைகள், காய்கறிகள் போன்ற உடலுக்கு நன்மை தரும் உணவுகள் மற்றும் உடலுக்கு தீமை தரும் துரித உணவுகள் நூடுல்ஸ், மைதா பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்ட உணவுகளை ஆர்வமுடன் சுவைத்து, அதன் பயன்களை அறிந்து விழிப்புணர்வு பெற்றனர். சிறுதானியம் மற்றும் இயற்கை உணவுகளை உட்கொள்வதால் பெறும் உடல் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.
The post திருத்தணி பள்ளியில் உணவுத் திருவிழா appeared first on Dinakaran.